சிவக்கரந்தை Sphaeranthus amaranthoides

Sphaeranthus amaranthoides 

Family: Compositae

Tamil: Siva karandhai

சிவக்கரந்தை Siva karandhai
**************************


சிவ கரந்தை pasumai nayagan www.thagavalthalam.com
















மீட்டல் கரந்தையாம்
************************

      சிவக்கரந்தை இரு வகைப்படும். சிகப்பு மற்றும் வெள்ளை. பொதுவாக பூக்களின்,காய்களின் நிறத்தை வைத்து சிவக்கரந்தை சிகப்பு என்றும் வெள்ளை என்றும் அடையாளம் காணலாம். சில செடிகள் பூ பூப்பதற்கு முன்பும்,சில செடிகள் பூ பூத்த பிறகும் மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம். உதாரணமாக சிவக்கரந்தையை பூ பூப்பதற்கு முன்பும், குப்பை மேனியை பூ பூத்த பிறகும் பயண்படுத்த வேண்டும் . 

         எந்த செடி ரசத்தை கட்டுமோ அந்த செடி வீரியத்தை கட்டும் அல்லது எந்த செடி வீரியத்தை கட்டுமோ அந்த செடி பாதரசத்தை கட்டும்.

          சிவக்கரந்தையில் சிகப்பு பூ கந்தக சத்தும் , வெள்ளை பூ ரச சத்தும் உடையது . சித்தர்கள் கூறிய கற்ப மூலிகைகளில் முக்கியமான ஒன்றாகும், இதில் இருந்து சத்து (SALT) எடுப்பார்கள். கந்தகத்தை (SULPHUR) செந்தூரிக்கவும், தாலகம் ( YELLOW ARSANIC ) செந்தூரிக்கவும் பயண்படும்.
            இது ஒரு தெய்வீகம் நிறைந்த செடி. இதை நிலைகளால் சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் பூஜைகள் செய்யலாம். 



pasumai nayagan www.thagavalthalam.com சிவ கரந்தை
சிவ கரந்தை www.thagavalthalam.com

சிவ கரந்தை pasumai nayagan www.thagavalthalam.com

                                                                                               

                                       சிவக்கரந்தை சத்தாம்
                                         ****************************
   சிவக்கரந்தையை நிழலில் உலர்த்தி ,சாம்பலாக்கிக் கொள்ளவேண்டும். இந்த சாம்பல் ஒரு படி ,பனிஜலம் அல்லது சுத்தஜலம் இரண்டு படி என ஒரு மண்பாண்டத்தில் இரண்டையும் கொட்டி நன்றாக கலக்கிவிட்டு காற்றில்லாத இடத்தில் வைத்து வேறு ஒரு மண்பாண்டத்தால் மூடவேண்டும்.
     பிரதிதினமும்  நான்கைந்து தடவை மரக்கொம்பினால் கலக்கி வரவேண்டும். இவ்விதம் மூன்று  நாட்கள் சென்ற பிறகு நான்காம் நாள் கலக்காமல் வைத்து ,ஐந்தாவது நாள் தெளிவாக இறுத்து (தெளிந்ததை மட்டும் எடுத்து) மண்பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைத்து சிறிய தீயில் எரித்து வரவேண்டும். அப்போது இதனை அடிக்கடி மரத்துடுப்பால் துழவியும் வரவேண்டும். குழம்பு பதம் வந்தவுடன் ஓர் ஈர்க்குச்சியினால் தொட்டு நகத்தின் மீது வைத்து ஆறினபின் இறுகி கெட்டியானால் , பதமென கீழ்  இறக்கி ஒரு பீங்கான் பாத்திரத்தில் வழித்து அதை வெயிலில் வைத்து வந்தால் ஈரமுளர்ந்து சத்தாகிவிடும் .இதுவே சிவக்கரந்தை சத்தாம் .

அளவு :-       குன்றிமணி எடை ஒன்று முதல் நான்கு வரையில் எடுத்து துணை மருந்தாக தேன் /நட்டுசர்க்கரை/நெய்/அல்லது வெண்ணை முதலியவைகளில் காலை ,மாலை இரு வேளையும் உள்ளுக்கு உபயோகிக்கலாம் .            

உபயோகம்:- ரத்த சம்மந்தமான வியாதிகளெல்லாம் தீர்த்து இரத்தத் சுத்தியாக்கி தேகதிடம் , தேகபலம் , தேகவசீகரம் முதலியவை உண்டாகி ஆத்ம சக்தி விருத்தியாகும் .இதனை எல்லா நோய்களுக்கும் உபயோகிக்கலாம். வேறு லேகியம் / சூரணம் முதலியவைகளிலும் தகுந்த அளவு சேர்த்து உபயோகித்தால் அந்தந்த மருந்துகளுக்குரிய குணங்களை சிறப்பு செய்யும் . இரசவாத முறைகளில் இரசம் முதலிய சரக்குகளை கட்டவும்  உபயோகிக்கலாம்.

*****************************************

மரங்களால் தான் சுற்றுச்சூழலை மேம்படுத்த முடியும்

மதம் என்பது மனிதனை பன்படுத்துவதர்க்காகவும் 
மனிதனுக்கு உகந்த வாழ்க்கை முறையை கற்பிப்பதர்காகவும்
கடவுள் என்ற சுவற்றில் தீட்டப்பட்ட மிக அழகான ஒவியம்
இங்கே பூசாரிகளால் செய்யப்பட்ட மாற்றங்களில்
சில நிறைகளும் உண்டு  சில குறைகளும் உண்டு.

மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இந்து மதத்தின் ஒரு கூறாகும்,
மரங்களால் தான் சுற்றுச்சூழலை மேம்படுத்த முடியும்
ஆகவே தான் ஸ்தலவிருக்ஷங்களாக மரங்களை அமைத்துள்ளனர்.
அதிக அளவு ஆக்சிஜனை வழங்க கூடிய அரச மரம் நமது நாட்டின் தெய்வீக (தேசிய) மரமாக போற்றப்படுகின்றது. பழங்கால இந்து மத கோவில்கள் அனைத்திலும் ஏதாவது ஒரு மரம் ஸ்தலவிருக்ஷமாக உள்ளது. சிவனுக்கு உகந்த வில்வ மரங்களும் கிருஷ்ணனுக்கு உகந்த பின்னை மரங்களும் ஸ்தலவிருக்ஷங்களாக உள்ளன.மேலும் மா, வன்னி, வேம்பு, கொன்றை, பலா, அத்தி, வாழை, இலுப்பை, கடம்ப மரம், மகிழ மரம், மருது, போன்ற மரங்கள் ஸ்தலவிருக்ஷங்களாக இருப்பதை காண்கிறோம்.இவற்றுள் பல மரங்களை நாம் இன்று கோவில்களில் மட்டுமே காணமுடியும். இப்படி இந்து மதம் காலங்களை கடந்து ஒரு தொலைநோக்கு பார்வையுடனும் அறிவியல் சிந்தனையுடன் நம் வாழ்கையை அமைத்ததை காண்க.  
-அத்திகிரி அருளாளன்

சென்னையில் செவ்வாய் ஸ்தலம்

        ஜாதகத்தில் செவ்வாயின் பாம் அதிகமாயிருந்தால்தான் தைரியம், வீடு அமைதல், அரசியல் பதவி போன்றவை ஏற்படும். செவ்வாய் 2,4,7,8,12 ஆகிய கட்டங்களில் இருந்தால் செவ்வாய் தோசம் ஆகும். இந்த செவ்வாய் தோசம் பெற்ற ஜாதககர்கள், கடகத்தில் செவ்வாய் நீசமடைந்தவர்கள், செவ்வாய் தசை நடப்பவர்கள், பெயரில் நடப்பு எழுத்து I,L,R,Y போன்ற எழுத்துக்கள் நடப்பவர்கள் நிச்சயம் இத்தலத்திற்கு சென்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.
தலத்தின் இருப்பிடம் :
       இத்தலம் பூந்தமல்லியில் அமைந்துள்ளது. பூவிருந்தவல்லி எனவும் அழைக்கப்படும். வெண் தாமரைச் செல்வி, செந்தாமரைச் செல்வி ஆகியோரை இது குறிக்கிறது. இங்கே கலைமகள் இறைவனை வழிபட்ட இடமாதலால் இவ்வூருக்கு கலைமகள் பெயராலேயே பூவிருந்தவல்லி என வழங்கலாயிற்று.
இறைவனின் திருப்பெயர் :
        வைத்தியநாத சுவாமி
ஆலய தரிசன நேரம் :
        காலை - 6 மணிமுதல் 12.30 வரை
        மாலை - 5 மணிமுதல் 8.30 வரை
ஆலய சிறப்புகள் :
        இத்தலத்தில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரியனின் கதிர்கள், மாசித் திங்கள் 21,22,23,24,25 ஆகிய தேதிகளி்ல் பொழிவது கண் கொள்ளா காட்சியாகும். இதனையே இப்பகுதி மக்கள் சூரியன் பூஜித்த தலம் இத்தலம் ஆகும். நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாயும் பூஜித்ததலம் எனும் பெருமையும் இத்தலத்திற்கு உண்டு.
செவ்வாய் துதி :
        “சிறப்புற மணியே செவ்வாய்ந் தேவே குறையிலா
         தருள்வாய் குணமுடன் வாழ மங்களச் செவ்வாய்
         மலரடி போற்றி அங்காரகனே அவதிகள் நீக்கு”

சென்னையில் சனி பகவான் ஸ்தலம்

   ஜாதகத்தில் குருவின் இருப்பிடத்தைப் பார்ப்பது போலவே சனியின் இருப்பிடமும் ஜோதிடர்களால் நன்கு கவனிக்கப்படும் ஏனெனில் மானுட ஜென்மம் செய்யும் பாவங்கள், தவறுகள் போன்றவற்றுக்கு தண்டனை கொடுத்து மானுடத்தை நல் வழிப்படுத்தும் பொறுப்பு இக்கிரகத்துக்கு இறைவன் வழங்கி உள்ளார். கொஞ்சம் கடுமையான நீதிபதிதான் இக்கிரகம். எனவே மனிதன் பொதுவாக இக்கிரகத்தின் பாதிப்பால் துன்பம் அடைவான். எனவே பொதுவான நோய்கள் பாதித்தவர்கள், சனிதசை நடப்பவர்கள், சனி நீச்சம் பெற்றவர்கள், ஏழரைச் சனி நடப்பவர்கள், பெயரில் நடப்பு எழுத்து C,H,L,Q ஆகியவை நடப்பில் உள்ளவர்கள் இத்தலம் சென்று பரிகாரம் செய்வது நலம்.
தலத்தின் இருப்பிடம் :
        இத்தலம் பொழிச்சலூரில் உள்ளது. பல்லாவரத்திற்கும், பம்மலுக்கும் இடையில் இவ்வூர் உள்ளது.
இறைவனின் திருப்பெயர் :
        ஸ்ரீ அகஸ்தீஸ்வரர்
ஆலய தரிசன நேரம் :
        காலை - 6 மணிமுதல் 11.30 வரை
        மாலை - 4 மணிமுதல் 8 மணிவரை
ஸ்தல சிறப்புகள் :
       மூலவர் சந்நிதியானையின் பின்பகுதி போன்ற அமைப்பில் கட்டப்பட்டது. இந்த சன்னதியில் நிற்கும்போது மெல்ல மெல்ல மனம் உள்முகமாகி தியானம் செய்வது போன்ற மன அமைதியையும், மிகழ்ச்சியையும் அனுபவிக்கலாம். சனீஸ்வரபகவானே இங்குள்ள சிவனை பூஜித்து, திரு நள்ளாறு தீர்த்தத்தில் நீராடி தன் தோசத்தை நீக்கீ, தனி சன்னதியோடு அருள் பாலிக்கிறார். சனிப் பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெறும். திரு நள்ளாறு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து தோச நிவர்த்தியடையலாம்.
சனி பகவான் துதி :
      “சங்கடந் தீர்க்கும் சனி பகவானே மங்களம் 
       பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி
       சாகா நெறியில் இச்சகம் வாழ இன்னருள் தாதா”

சென்னையில் கேது பகவான் ஸ்தலம்

          ஞானத்திற்கு அதிபதியான கேது பகவான் ஜாதகத்தில் கெட்டுப் போயிருந்தாலும், கேது தசை நடைபெற்றாலும், தோல் நோய்களால் அவதிப்பட்டலாலும், பெயரில் நடப்பு எழுத்து O,S,Z போன்றவை நடைபெற்றாலும் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் பெற்று நன்மையடையலாம்.


இறைவனின் திருப்பெயர் :
         நீலகண்டேஸ்வரர்
ஆலய தரிசன நேரம் :
         காலை - 9.30 முதல் 11 வரை
         மாலை - 4.30 முதல் 7 வரை
இத்தலத்தின் இருப்பிடம் :
         இத்தலம் கோவூர் மற்றும் போரூர் ஆகிய ஊர்களுக்கு இடையில் அமைந்துள்ளது. கெருகம்பாக்கம் எனும் ஊர். இங்குதான் கேது பரிகாரத்தலம் உள்ளது.
தல சிறப்புகள் :
         எல்லா ஆலயங்களிலும் விநாயகர்தான் முதலில் இருப்பார். ஆனால் இங்கு நாகர் தான் முதலில் இருப்பார். இங்கு திருமணத்தடைகள் அகல, நோய்கள் தீர சிறப்பு பரிகார ஹோமங்கள் செய்யப்படுகிறது. கிரக சங்கட விநாயகர் என்ற பெயருடன் மஹா கணபதி அருள் பாலிக்கிறார். கேது ப்ரீதி, கேது தோச நிவர்த்தி பூஜைகள் செவ்வாய் கிழமைகளில் செய்யப்படும்.
கேது துதி :
        “கேதுத் தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றி பாபம்
         தீர்ப்பாய்வாதம் வம்பு வழக்கு களின்றி கேதுத் தேவே
         கேண்மையாய் நட்சி”

சென்னையில் சுக்ர பகவான் ஸ்தலம்

      ருவருடைய ஜாதகத்தில் சுக்கிரனின் பலம் மிக மிக அவசியம் மகிழ்ச்சிக்கும், திருப்திகரமான திருமண உறவுக்கும் சுக்கிரனின் பங்கு அதிகம், ஒரு மனிதனுக்கு சுக்கிரனின் ஆதிக்கம் இருந்தால்தான் அவன் பூமியில் சொகுசான வாழ்க்கையை வாழமுடியும். நமக்கு அழகை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் கிரகம் இதுதான். அதிர்ஸ்டம் வழங்குவதும் இக்கிரகத்தின் ஒரு தன்மையே. சுக்கிரன் கன்னி ராசியில் நீச்சமடைவார் அவ்வாறு அமைப்பு பெற்ற ஜாதகர்கள், சுக்கர தசை நடப்பில் உள்ளவர்கள், J,P,V போன்ற எழுத்துக்கள் நடப்பு எழுத்தாக உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து அதிர்ஸ்டம் பெறலாம்.
இத்தலத்தின் இருப்பிடம் :
        இத்திருத்தலம் மாங்காட்டில் உள்ளது. குன்றத்தூரிலிருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் மாங்காடு அமைந்துள்ளது.
இறைவனின் திருப்பெயர் :
         வெள்ளீ சுவரர்
ஆலயதரிசன நேரம் :
        காலை 6 மணிமுதல் 1 மணிவரை
        மாலை 4.30 முதல் 9 மணிவரை
தலவரலாறு :
         வாமன அவதாரத்தில் மஹாபலி சக்கரவர்த்தி தன் யாசம் நிறைவுபெற தானம் கொடுக்கும் போது, மஹாவிஸ்னு தானம் பெற வேண்டி வந்திருந்த சமயம் சுக்கிராச்சாரியர் வேண்டாம் தானம் செய்யக் கூடாது என தடுத்தார். இருந்தும் தானம் கொடுக்க முன்வருகிறார் மஹாபலி. எனவே அத்தானத்தை தடுக்கும் பொருட்டு கமண்டலத்தின் துவாரத்தை வண்டு உருவில் சுக்கிராச்சாரியார் அடைகிறார். அப்பொழுது மஹாவிஸ்னு கமண்டலத்தின் துவாரத்தில் தர்பை புல்லினால் குத்தும்போது சுக்கிராச்சாரியார் ஒரு கண்ணை இழக்கிறார். சுக்கிராச்சாரியார் பூலோகத்துக்கு சென்று மாங்காடு எனும் இடத்தில் இறைவனை நோக்கி தவமிருக்கிறார். அவரின் கடுந்தவத்திற்க இறங்கி இறைவன் மீண்டும் கண் பார்வையை வழங்குகிறார். சுக்கிராச்சாரியாரின் வேண்டுகோலுக்கிணங்கி இங்கு எழுந்தருளியுள்ள இறைவனுக்கு வெள்ளீசுவரர் என பெயர் பெற்று அருள்பாலிக்கிறார். எனவே இத்தலம் சுக்கிரனுக்கு பரிகாரத்தலமாக விளங்குகிறது.
சுக்கிர துதி :
         “சுக்கிர மூர்த்தி சுபமிகத் ஈவாய் வக்கிர மின்றி வரமிகத்
          தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் 
          கொடுப்பாய் அடியார்க் கருளே”

சென்னையில் புதன் பகவான் ஸ்தலம்

        சூரிய குடும்பத்தில் மிகச்சிறிய கிரகம் இதுதான். நமக்கு புத்தி சாதுர்யம், வாக்குத்திறமை, படிப்பறிவு, வியாபாரத்திறமை போன்றவற்றை வழங்குவது இக்கிரகம்தான். புத்திக்குறைவு உள்ளவர்கள், நரம்பு பிரச்சனை உள்ளவர்கள், படிப்பில் ஆர்வம் இல்லாத குழந்தைகள் ஆகியோர் புத பகவானுக்கு நிச்சயம் பரிகாரம் பண்ண வேண்டும். மீனத்தில் புதன் இருந்து நீச்சம் பெற்ற ஜாதகர்கள், புதன் பாவக் கிரகங்களோடு சம்ந்தப்பட்டவர்கள், புதன் தசை நடப்பவர்கள் பெயரில் நடப்பு எழுத்து E,N,W போன்ற எழுத்து கொண்டவர்கள் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்து கொண்டால் நன்மையடையலாம்.
இத்தலத்தின் இருப்பிடம் :
       இத்தலம் கோவூர் பஸ்நிறுத்தத்திற்கு அருகில் அமைந்துள்ளது. குன்றத்தூர்ரிலிருந்து போரூர் செல்லும் சாலையில் கோவூர் அமைந்துள்ளது.
இறைவனின் திருப்பெயர் :
       சுந்தரே சுவரர்
தரிசனநேரம் :
        காலை 6 முதல் 11.30 வரை
        மாலை 6 முதல் 9 வரை
தலவரலாறு :
        இக்கோயில் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. செந்தமிழ் நாட்டின் 1008 சிவாலயங்களில் தொன்மை வாய்ந்ததும், சேக்கிழார் பெருமான் மற்றும் தியாகராஜரால் பாடல் பெற்றதுமான இத்தலம் மிகச்சிறப்புடையது. அன்னை காமாட்சி மாங்காடு தலத்தில் செய்த கடுந்தவத்தின் காரணமாக மூவுலகிலும் வெப்பம் தோன்றி துன்பம் தந்த நேரத்தில், மகாலட்சுமி காமதேனுவாக இவ்வூரில் தங்கிதேவர்களுக்கு குளிர்ந்த நிழல் தந்தமையால் இவ்வூர் கோ+ஊர்=கோவூர் என ஆயிற்று இத்தலத்தின் விருட்சம் மஹா வில்வம் !
புதன் துதி :
       “இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி 
        போற்றி பேர்தந் தாள்வாய் பண்ணெளியானே  உதவியே யருளும்
        உத்தமா போற்றி