சென்னையில் கேது பகவான் ஸ்தலம்

          ஞானத்திற்கு அதிபதியான கேது பகவான் ஜாதகத்தில் கெட்டுப் போயிருந்தாலும், கேது தசை நடைபெற்றாலும், தோல் நோய்களால் அவதிப்பட்டலாலும், பெயரில் நடப்பு எழுத்து O,S,Z போன்றவை நடைபெற்றாலும் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் பெற்று நன்மையடையலாம்.


இறைவனின் திருப்பெயர் :
         நீலகண்டேஸ்வரர்
ஆலய தரிசன நேரம் :
         காலை - 9.30 முதல் 11 வரை
         மாலை - 4.30 முதல் 7 வரை
இத்தலத்தின் இருப்பிடம் :
         இத்தலம் கோவூர் மற்றும் போரூர் ஆகிய ஊர்களுக்கு இடையில் அமைந்துள்ளது. கெருகம்பாக்கம் எனும் ஊர். இங்குதான் கேது பரிகாரத்தலம் உள்ளது.
தல சிறப்புகள் :
         எல்லா ஆலயங்களிலும் விநாயகர்தான் முதலில் இருப்பார். ஆனால் இங்கு நாகர் தான் முதலில் இருப்பார். இங்கு திருமணத்தடைகள் அகல, நோய்கள் தீர சிறப்பு பரிகார ஹோமங்கள் செய்யப்படுகிறது. கிரக சங்கட விநாயகர் என்ற பெயருடன் மஹா கணபதி அருள் பாலிக்கிறார். கேது ப்ரீதி, கேது தோச நிவர்த்தி பூஜைகள் செவ்வாய் கிழமைகளில் செய்யப்படும்.
கேது துதி :
        “கேதுத் தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றி பாபம்
         தீர்ப்பாய்வாதம் வம்பு வழக்கு களின்றி கேதுத் தேவே
         கேண்மையாய் நட்சி”