ஜாதகத்தில் செவ்வாயின் பாம் அதிகமாயிருந்தால்தான் தைரியம், வீடு அமைதல், அரசியல் பதவி போன்றவை ஏற்படும். செவ்வாய் 2,4,7,8,12 ஆகிய கட்டங்களில் இருந்தால் செவ்வாய் தோசம் ஆகும். இந்த செவ்வாய் தோசம் பெற்ற ஜாதககர்கள், கடகத்தில் செவ்வாய் நீசமடைந்தவர்கள், செவ்வாய் தசை நடப்பவர்கள், பெயரில் நடப்பு எழுத்து I,L,R,Y போன்ற எழுத்துக்கள் நடப்பவர்கள் நிச்சயம் இத்தலத்திற்கு சென்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.
தலத்தின் இருப்பிடம் :
இத்தலம் பூந்தமல்லியில் அமைந்துள்ளது. பூவிருந்தவல்லி எனவும் அழைக்கப்படும். வெண் தாமரைச் செல்வி, செந்தாமரைச் செல்வி ஆகியோரை இது குறிக்கிறது. இங்கே கலைமகள் இறைவனை வழிபட்ட இடமாதலால் இவ்வூருக்கு கலைமகள் பெயராலேயே பூவிருந்தவல்லி என வழங்கலாயிற்று.
இறைவனின் திருப்பெயர் :
வைத்தியநாத சுவாமி
ஆலய தரிசன நேரம் :
காலை - 6 மணிமுதல் 12.30 வரை
மாலை - 5 மணிமுதல் 8.30 வரை
ஆலய சிறப்புகள் :
இத்தலத்தில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரியனின் கதிர்கள், மாசித் திங்கள் 21,22,23,24,25 ஆகிய தேதிகளி்ல் பொழிவது கண் கொள்ளா காட்சியாகும். இதனையே இப்பகுதி மக்கள் சூரியன் பூஜித்த தலம் இத்தலம் ஆகும். நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாயும் பூஜித்ததலம் எனும் பெருமையும் இத்தலத்திற்கு உண்டு.
செவ்வாய் துதி :
“சிறப்புற மணியே செவ்வாய்ந் தேவே குறையிலா
தருள்வாய் குணமுடன் வாழ மங்களச் செவ்வாய்
மலரடி போற்றி அங்காரகனே அவதிகள் நீக்கு”
