சென்னையில் ராகு பகவான் ஸ்தலம்

       ராகுதசை தற்காலத்தில் நடப்புவர்களும், செய்வினை, தீவினை பாதிப்பு உள்ளவர்களும் பெயரில் நடப்பு எழுத்து D,M போன்ற எழுத்து நடப்பவர்களும் இத்தலத்திற்கு வந்து தோச நிவர்த்தி பெறலாம். எந்த காரியத்தை செய்தாலும் அதில் போட்டி பொறாமையால் அவதிப்படுபவர்களும் இராகுவின் பாதிப்புக்கு ஆளானவர்களே இவர்களும் இக்கோயிலுக்கு வந்து நன்மை பெறலாம். 
இத்தலத்தின் இருப்பிடம் :
        இத்தலம் குன்றத்தூர் பஸ் நிலயத்திற்கு மிக அருகாமையில் உள்ளது.
இறைவனின் பெயர்:
        நாகேஸ்வர சுவாமி
தரிசனம் நேரம் :
        காலை : 7 முதல் 11 வரை,  5 முதல் 9 வரை
தலவரலாறு :
         சேக்கிழார் பெருமான் ஏற்படுத்திய இத்திருத்தலம் சுமார் 850 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. குன்றத்தூரில் அமைந்துள்ள இக்கோயில் ராகு பகவானுக்கு பரிகாரத்தலமாக அமைந்துள்ளது. இவ்வூருக்கு தெற்கில் பல குன்றுகள் உள்ளன. எனவே குன்று அடுத்து ஊர்=குன்றடுத்தூர்- குன்றத்தூர் ஆனது. இக்கோயிலின் தலவிருட்சம் 'செண்பக மரம்' இக்கோயிலில் கணபதி, உச்சிஸ்டகணபதி, நர்த்தன கணபதி, வலஞ்சுழி கணபதி என்ற பல்வேறு வடிவங்களில் காட்சி தருகிறார்.
கால சர்ப்ப தோசம் என்பது ஜாதகத்தில் முக்கிய தோசம் ஆகும். ராகு-கேது பிடிக்குள் மற்ற ஏழு கிரகங்களும் அகப்பட்டு தன் பலத்தை இழக்கும் பெரிய தோசம் அது. இத்தோசம் உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து ராகுகால பூஜையில் கலந்து கொண்டு பரிகாரம் செய்தால் தோச நிவர்த்தியடைந்து நன்மையடையலாம்.
ராகுதுதி :
        “அரவெனும் ராகு ஐயனே போற்றி இரவா தருள்வாய்
         கஸ்டங்கள் நீக்கி ஆக வருள்புரி அனைத்திலும் வெற்றி
         ராகு கனியே ரம்மியா போற்றி”