சென்னையில் குருபகவான் ஸ்தலம்

   ஜாதகத்தில் குரு பகவானின் நிலை மிக முக்கியமானது. தான்இருக்கும் இடத்திலிருந்து 5,7,9 ம் பார்வைகளால் அந்த இடத்தை தூய்மைப்படுத்தி அந்த ஸ்தான பலன்களை உயர்த்திக்காட்டுவதில் குரு பகவானுக்கு நிகர் அவரேதான் சூரியக்குடும்பத்தில் மிகப்பெரியதும், உன்னதமான கிரகமுமாகிய குரு பகவானுக்கு போரூரில் பரிகாரத்தலம் உள்ளது. ஜாதகத்தில் குருபகவான் மகரத்தில் நீசமாவார். இந்நிலையில் பிறந்த ஜாதகர்கள், குருதசை நடப்பவர்கள், குழந்தையில்லாத தம்பதிகள், குடும்பத்தில் நிம்மதியில்லாதவர்கள், பெயரில் G,I,U போன்ற எழுத்துக்கள் நடப்பு எழுத்துக்களாகக் கொண்டவர்கள் ஆகியோர் இத்தலத்திற்கு வந்து சுபீட்சம் பெறலாம்.
இத்தலத்தின் இருப்பிடம் :
     இத்தலம் போரூர் சிக்னலிளிருந்து மிக அருகாமையில் அமைந்துள்ளது.
இறைவனின் பெயர்:
     ஸ்ரீ ராமநாத ஈவரர்
தரிசனநேரம் :
      காலை : 6மணிமுதல் 11.30 வரை
      மாலை : 5மணிமுதல் 8.30 வரை
தலவரலாறு :
       சீதையை தேடிவந்த ராமர் போரூரில் நெல்லி மரத்தடியில் அமர்ந்தார் ஞான திருஸ்டியால் பூமிக்கடியில் லிங்கம் இருப்பதையும், அதன் சிரசில் தன் கால்பட்டு தோசம் பெற்றதையும் உணர்ந்து, ஒரு மண்டலம் தவம் செய்தார். அத்தவத்தால் மகிழ்ந்த சிவன் பூமியை பிளந்து கொண்டு வெளிவந்தார். இராமர் அச்சிவனை கட்டித்தழுவி அமிர்தலிங்கமாக மாற்றினார்.
       ராமநாத ஈசுவரர் எனவும் பெயரிட்டார். பின்னர் சிவனிடம் சீதை இருக்கும் இடத்தை கேட்டு அறிந்து இங்கிருந்து போருக்குப் புறப்பட்டதால் இவ்வூருக்கு 'போரூர் ' எனப் பெயர் வந்தது.
        இராமருக்கு குருவாக விளங்கியதால் இங்குள்ள சிவன், விஸ்னு அம்சமாக விளங்குவது இக்கோவிலின் சிறப்பு. எனவே இத்தலம் குரு-தட்சிணா மூர்த்தி தலமாக விளங்குகிறது. தட்சிணா மூர்த்திக்கு செய்ய வேண்டிய பரிகார பூஜை அனைத்தும் சிவனுக்கே நடைபெறுகிறது. தலவிருட்சம் 'நெல்லிக் மரம்' விசேசமான ஒன்றாகும்.
குருபகவான் துதி :
"குணமிகு வியாழ குரு பகவானே மனமுடன்
  வாழ மிகிழ்வுடன் அருள்வாய் ப்ருஸ்பதி 
   வியாழப் பரதகுரு நேசா க்ரகதோசமின்றி கடாட்சித்தருள்வாய்"
ஆலய தொடர்புக்கு : 044-24829955