சென்னையில் சந்திரபகவான் நவக்கிரகத் தலம்

         வக்கிரங்களில் சூரியனுக்கு அடுத்ததாக வரக்சகூடியது சந்திரன் ஆகும். சந்திரன் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால்தான் ஜாதகருக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, குடும்ப வளம், கற்பனை வளம், அதிகப்படியான செல்வ வளம் போன்றவை ஏற்படும். சந்திரன் பலம் குறைத்திருந்தால் இவை அனைத்திலும் குறைபாடு தோன்றும்.
         சந்திரன் பலம் குறைந்தவர்கள், சந்திரதசை நடப்பவர்கள், பெயரில் நடப்பு எழுத்து B,K,T போன்ற எழுத்துக்கள் நடப்பவர்கள் சந்திரத்தலத்திற்கு சென்று தரிசித்தால் குறைகள் நீங்கி சுபபலன்கள் நடக்கும்.
இத்தலத்தின் அமைவிடம்:
         சோமங்கலம், தாம்பரத்திலிருந்து 25 கீ.மீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. குன்றத்தூரில் இருந்து 10 கீ.மீ தான்.
இறைவனின் பெயர் :
          சோமநாத ஈசுவரர்
ஆலுய தரிசனம் நேரம் :
          காலை : 7.00 முதல் 10.30 வரை
          மாலை : 5.30 முதல் 7.00 வரை
தலவரலாறு :
         சந்திரன் தட்சனின் சாபத்தால் 16 கலைகளும் இழந்து கூடிய ரோக முற்று, இத்தலத்தில் உள்ள இறைவனை நோக்கி பெரும் தவம்புரிந்து சிவபெருமான் அருளால் தட்சனின் சாபம் நீங்கி ழுழு சந்திரனாக உருப்பெற்றதினால் இறைவனின் திருப்பெயர் சோமநாத ஈசுவரர் என்று வழங்கப்பட்டது. இறைவயின் திருப்பெயர் - காமாட்சி அம்மன் சந்திரனால் ஏற்படுத்திய தீர்த்தம், சோம தீர்த்தம் என்றும், தல விருட்சம் சரக் கொன்றை மர மாகவும் விளங்குகிறது. இத்தலத்தில் நந்தி தேவர் இறைவனை நோக்காமல் கிழக்கு நோக்கி இருப்பது இக்கோவிலின் சிறப்புகளில் ஒன்று.
சந்திர துதி :
        “எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி,
         திருவருள் தருவாய் சந்திர போற்றி, சத்குரு போற்றி
         சங்கடந்தீர்ப்பாய் சதுரா போற்றி”
   மேற்கண்ட துதியை ஆழ்ந்து படித்து பின் சந்திர ஒரையில் நெய் தீபம் ஏற்றி வணங்கினால் எல்லாவித நோய்களும் நீங்கி, மகிழ்ச்சியும், செல்வ வளமும் கூடும்.