சென்னையில் சூரியபகவான் நவக்கிரகத் தலம்

            சென்ற வாரத்தில் சென்னையில் நவக்கிரகத் தலங்கள் எங்கெங்கு உள்ளன எனப்பார்த்தோம். இப்போது இத்தலங்களைப் பற்றி தனித்தனியாக பார்க்கலாம்.
சூரியபகவான் :
           நவக்கிரகங்களில் தலையாய கிரகமான சூரியனுக்கு கொளப்பாக்கத்தில் பரிகாரத்தலம் உள்ளது. ஜாதகத்தில் சூரியனின் நிலை சரியில்லாதவர்கள், சூரிய தசை நடப்பவர்கள், நியூமராலஜிப்படி 1 எண் ஆதிக்கக்காரர்கள், பெயரில் A,J, போன்ற எழுத்து நடைமுறையில் உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து நற்பலன்களைப் பெறலாம். போரூர் சந்திப்பிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது.
காலையில் :- 7.30 முதல் 9 மணிவரை,
மாலையில் :- 6 மணிமுதல் 8 மணிவரையும் ஆலயம் திறந்திருக்கும்.
தலவரலாறு :
             இத்தலம் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இவ்வாலயத்தில் சூரியன், பைரவர், சிவபெருமான் ஆகியோரை ஒரே இடத்தில் நின்று தரிசிக்க பன்னிரண்டு துவாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்துவாரங்கள் வழியே சுவாமி தரிசனம் செய்ய சகல தோசங்களும் நிவர்த்தியாகும். இத்தலத்தை சூரியன், அகஸ்தியர், வஸிஸ்டர் ஆகிய மாமுனிகள் வழிபட்டதாக சொல்லப்படுகிறது. இங்கு உறையும் இறைவனின் பெயர் :  ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் என்கிற வாகீஸ மஹாதேவர்.
               பொதுவான ஆரோக்கியம் வோண்டுவோரும், சமுதாயத்தில் நன் மதிப்பு வேண்டுவோரும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றிவேண்டுவோரும் சூரிய தலத்திற்கு ஞாயிற்றுக் கிழமைகளில் சென்று தரிசித்தால் வேண்டுவனவற்றைப் பெறலாம்.
சூரிய துதி:
                 “சீலமாய் வாழ்ச் சீரருள் புரியம் ஞலாம் புகழும் ஞாயிறே போற்றி ! சூரியா போற்றி ! சுதந்திர போற்றி ! வீரியா போற்றி ! வினைகள் களைவாய் ! ”
ஆலயத் தொடர்புக்கு : 09443107809