சென்னையில் நவக்கிரக தலங்கள்

  இறைவனின் இயக்கத்தால் இயங்கும் இப்பூமியில் வாழும் நாம் கர்மவினையினால் பல துன்பங்களை அடைகிறோம். உடலுக்கு நோய் வந்தால் மருத்துவரை அணுகுவதைப்போல், வாழ்வில் வரும் பல்வேறு துன்பங்களை இறை வழிப்பாடுத்தலங்களுக்கு சென்று வருவதால் நீக்கிக் கொள்ளலாம். நாம் அடையும் துன்பங்கள் எல்லாம் நவக்கோள்களால் வருபவை. இக்கோள்களின் தீமைகளையை அந்தந்த கோள்களின் தீங்கை நீக்கும் நவக்கிரக  தலங்களுக்கு சென்று வந்தால் அந்த கிரகத்தின் தீமையிலிருந்து விடுபடலாம். கும்பகோணத்தை சுற்றி நவக்கிரக தலங்கள் உள்ளன இது நம் அனைவருக்கும் தெரியும். சென்னையிலும் நவக்கிரக தலங்கள் உள்ளன. இது நிறைபேருக்கு தெரியவில்லை. கும்பகோணம் சென்று நவக்கிரகத்தலங்களை  தரிசிக்க முடியாதவருக்கு சென்னையிலுள்ள நவக்கிரக தலங்கள் பெரிய வரப்பிரசாதம். அனைவரும் சென்று பயனடைவோம். சென்னையில் உள்ள இத்தலங்களின்  இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

கிரகங்கள்                            இறைவன்பெயர்                                 இடம்

சூரியன்                                 அகஸ்தீஸ்வரர்                       கொளப்பாக்கம்
சந்திரன்                                சோமநாதேஸ்வரர்               சோமங்கலம்
குரு                                         ராமநாதேஸ்வரர்                   போரூர்
ராகு                                         வடநாகேஸ்வரர்                   குன்றத்தூர்
புதன்                                       திருமேனீஸ்வரர்                   கோவூர்
சுக்ரன்                                    வெள்ளீஸ்வரர்                        மாங்காடு
கேது                                       நீலகண்டேஸ்வரர்                கெருகம்பாக்கம்
சனி                                         அகஸ்தீஸ்வரர்                       பொழிச்சலூர்
செவ்வாய்                           வைத்தீஸ்வரர்                         பூவிருந்தவல்லி

                     இத்தலங்களின் விவரங்களை தனிதனியாக வரும் வாரங்களில் காண்போம். 

 -